மகளிர் தொழில் முனைவோர்களை கண்டறியும் முகாம்

ராணிப்பேட்டை ஆட்சியர் அலுவலகத்தில் உயர்தர தொழில் சேவைகளை வழங்க, தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை கண்டறியும் முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-14 10:46 GMT

மகளிர் தொழில் முனைவோர்களை கண்டறியும் முகாம் 

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உயர்தர தொழில் சேவைகளை வழங்க தகுதியான மகளிர் தொழில் முனைவோர்களை கண்டறியும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கி பேசும்போது: வாழந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் கிராமப்புற மகளிர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர பல்வேறு திட்டங்கள் தமிழக அரசு மூலம் செயல்படுத்தப்படுகிறது. தற்போது, உள்ள சந்தை தேவைகளை பொறுத்து உங்களிடம் உள்ள திறமைகளை கொண்டு உற்பத்தி செய்து வருமானம் ஈட்டலாம்.

உங்களின் திறமைகளை வெளிக்கொண்டு வரவும் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அரசு வழங்கும் சிறப்பு இதுபோன்ற வாய்ப்புகளை பயன்படுத்தி உங்களின் பொருளாதாரம் மற்றும் சமுதாயம் வளர்ச்சிடைய வேண்டும் இவ்வாறு பேசினார். மேலும், மாவட்டத்தில உள்ள மகளிர் தொழில் முனைவோர்கள்,தொழில் முனைவோர்களாக மாற ஆர்வம் உள்ளவர்களுக்கும் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம், தங்களது தொழில் நிறுவனத்தை வெற்றிகரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

உதாரணத்துக்கு, மார்க்கெட்டிங், பிராண்டிங், பேக்கேஜிங், சந்தை இணைப்புகள், ஏற்றுமதி, இறக்குமதி தர நிலைப்படுத்துதல், தொழில் நுட்பம், இயந்திரமயமாக்கல், தொழில் சார்ந்த புதுமை யுக்திகள், நிதி சேவைகள் போன்ற சேவைகள் வழங்க தொழில் முனைவோர்கள் அடையாளம் கண்டு தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது.

தொடர்ந்து, முகாமில் மகளிர் தொழில் முனைவோர் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியை ஆட்சியர் வளர்மதி பார்வையிட்டார். இதில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி, வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News