குழந்தையின் வயிற்றில் சிக்கிய நாணயம் ‘எண்டோஸ்கோபி’ மூலம் அகற்றம்
Update: 2023-12-08 06:50 GMT
சேலம் எருமாபாளையத்தை சேர்ந்த சாமிநாதன் என்பவரது 3 வயது குழந்தை கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஒரு ரூபாய் நாணயத்தை விழுங்கி விட்டது. அந்த குழந்தைக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது அதன் இரைப்பையில் நாணயம் சிக்கி இருப்பது தெரியவந்தது. பல்வேறு முயற்சிகள் செய்தும் குழந்தையின் வயிற்றில் இருந்து நாணயம் வெளியே வரவில்லை. இதையடுத்து அந்த குழந்தையை சேலம் நால்ரோடு நிதிஷ் அதிநவீன குடல் சிகிச்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அந்த குழந்தைக்கு மருத்துவமனையின் தலைமை டாக்டர் சிவசங்கர் சிகிச்சை செய்தார். எண்டோஸ்கோபி மூலமாக ‘பாரின் பாடி ரேட் டூத் போர்சப்ஸ்’ எனப்படும் நவீன கருவி வழியாக குழந்தையின் வயிற்றில் இருந்த நாணயம் வெளியே எடுக்கப்பட்டது. தற்போது குழந்தை நன்றாக உள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த குழந்தையின் பெற்றோர் நிதிஷ் மருத்துவமனை தலைமை டாக்டர் சிவசங்கர் மற்றும் குழுவினருக்கு நன்றி தெரிவித்தனர்