தமிழகத்தில் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த பாஜக சார்பில் குழு அமைப்பு
தமிழக பாஜக சார்பில் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்து ஆலோசனை நடத்த அமைக்கப்பட்டுள்ள குழுவில் எல். முருகன் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-29 16:56 GMT
கோப்பு படம்
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே பி நட்டா அனுமதியுடன் தமிழக அரசியல் கட்சிகளுடன் கலந்தாலோசணை நடத்த பாஜக சார்பாக குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய செயற்குழு உறுப்பினர்கள் பொன் ராதாகிருஷ்ணன், H ராஜா, தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.