பருவ மழைக்கால இடர்பாடுகள் குறித்து தெரிவிக்க புகார் எண் அறிவிப்பு!!

தஞ்சையில் பருவமழை பாதிப்புகள் குறித்து தெரிவிக்க புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-11-26 05:38 GMT

Phone

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் டெல்டா மாவட்டங்களை நோக்கி நகருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நாகையிலிருந்து தென்கிழக்கு திசையில் 630 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. சென்னையில் இருந்து தென்கிழக்கு திசையில் 830 கி.மீ. தொலைவிலும் புதுவையில் இருந்து 750 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. இன்னும் சில மணி நேரங்களில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது. இதன்காரணமாக, இன்று டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகனமழையும், ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழையும் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் நாகையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. காற்றுடன் பலத்த மழை பெய்து வருவதால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. கனமழை பெய்வதோடு கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதை அடுத்து கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. தஞ்சையில் பருவமழை பாதிப்புகள் குறித்து 93450 88997 எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் மழை கால இடர்பாடு குறித்து 1077, 04366-226 623, வாட்ஸ்அப் எண்- 94885 47941 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாகை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு மையத்தை 04365-1077, 1800-233-4233, வாட்ஸ்அப் எண்-84386 69800 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News