அணைக்கட்டு அருகே சிலிண்டர் வெடித்து தீ விபத்து

அணைக்கட்டு அருகே பேக்கரி கடையில் சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.;

Update: 2024-04-08 14:46 GMT

கோப்பு படம் 

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே கரடிக்குடி சந்தைமேடு பகுதியில் பிஸ்கட், பன், காரம், இனிப்பு என பேக்கரி பொருட்கள் தயாரித்து, கடைகளுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். சரவணன் என்பவர் இதை நடத்தி வருகிறார். வழக்கம்போல் இரவு கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.

நள்ளிரவு நேரத்தில் அங்கிருந்த சிலிண்டர் திடீரென வெடித்து தீப்பிடித்து கடை முழுவதும் பரவி உள்ளது. சிலிண்டர் வெடித்த சத்தத்தால் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எழுந்துள்ளனர். அப்போது புகை மண்டலமாக மாறி அருகில் இருந்த வீடுகளில் புகை வாசனை ஏற்பட்டுள்ளது. இ

Advertisement

தனை கண்ட அப்பகுதி மக்கள் ஓடிவந்து பார்த்தபோது கடையில் தீ விபத்து நடந்தது தெரிய வந்தது. இது குறித்து ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன் பேரில் நிலைய அலுவலர் (பொறுப்பு) சசிதரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.இந்த தீ விபத்தில் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சாம்பலாயின. இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News