பைக் மீது அரசு பேருந்து மோதி வாலிபர் பலி
தூத்துக்குடி அருகே மோட்டார் பைக் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். ;
Update: 2024-03-30 05:31 GMT
ராமநாதபுரம் அருகேயுள்ள பனையேறி நேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் இருளன் மகன் குருசாமி (34). இவர் பைக்கில் தூத்துக்குடி வந்து விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிச் சென்று கொண்டிருந்தார். கலைஞானபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது, ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் நோக்கிச் சென்ற அரசு பேருந்து, அவரது பைக் மீது மோதியது. இவ்விபத்தில் பலத்த காயம் அடைந்த குருசாமியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து குளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொ) ராஜகுமாரி வழக்குப் பதிந்து, அரசு பேருந்து ஓட்டுநரான கே.வேலாயுத புரத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மகன் ஜீவானந்தம் (55) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.