கே வி குப்பம்: அரசு பஸ் கண்டக்டர் விபத்தில் பலி!
கே.வி குப்பம் அருகே சாலை விபத்தில் அரசு பேருந்து கண்டக்டர் விபரத்தில் உயிரிழந்துள்ளார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-26 07:28 GMT
பலி
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த முருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் எம்.பிரபு (45). அரசு பஸ் கண்டக்டரான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டூ வீலரில் காங்குப்பம் கிராமத்தில் இருந்து கே.வி.குப்பத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார். காங்குப்பம் அருகே சாலை திருப்பத்தில் இருந்த 10 அடி ஆழ பள்ளத்தில் டூ வீலருடன் நிலை தடுமாறி விழுந்தார். அதில் தலையில் பலத்த காயம் அடைந்த அவர் வேலூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், பிறகு அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் நேற்று(25.03.2024) சிகிச்சை பலனின்றி பிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.