சுங்கச்சாவடியில் அரசு பேருந்து நிறுத்தம்
ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லாததால் கயத்தாறு சுங்கச்சாவடியில் அரசு பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-15 12:08 GMT

கோப்பு படம்
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 6.50 மணிக்கு நாகா்கோவிலுக்கு அரசு பேருந்து புறப்பட்டது. இந்தப் பேருந்து இரவு சுமாா் 7.35 மணிக்கு கயத்தாறு சுங்கச்சாவடியை அடைந்தது. ஆனால், ஃபாஸ்டேக் கணக்கில் பணம் இல்லை என்று கூறி பேருந்தை சுங்கச்சாவடி ஊழியா்கள் நிறுத்தி வைத்தனா். சுமாா் 20 நிமிடங்கள் நடந்த பேச்சுவாா்த்தைக்கு பின்னா் பணம் செலுத்தி பேருந்து புறப்பட்டுச் சென்றது.