வைர வியாபாரிகள் வீட்டில் சிக்கிய முக்கிய ஆவணம்
காரைக்குடி வைர வியாபாரிகள் வீட்டில் நடந்த சோதனையில் ஜிஎஸ்டி அதிகாரிகள் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
Update: 2023-12-31 04:27 GMT
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மகர நோன்பு அக்ரஹாரத்தில் வைர வியாபாரிகள் ராஜேந்திரன், கிரீஸ் ஆகியோரின் வீடுகள் உள்ளது. அதேபோல் வடக்கு வல்லப்பர் தெருவில் வைர வியாபாரி ஜஸ்வந்த் சிங் வீடு உள்ளது. இவர்களது வீடுகளில் கோவையில் இருந்து 17 கார்களில் வந்த மத்திய ஜிஎஸ்டி துறையைச் சேர்ந்த 30க்கு மேற்பட்ட அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் சிக்கிய முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்து சென்றனர்.