சென்னை எண்ணூரில் ஒரு கிலோ திமிங்கலம் எச்சம் பறிமுதல்
சென்னை எண்ணூரில் ஒரு கிலோ திமிங்கலம் எச்சத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-09 16:37 GMT
திமிங்கலம் எச்சம்
சென்னை எண்ணூர் காவல் துறையினர் நேதாஜி நகர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவர் உறவினர்கள் மூலம் விற்பனை செய்வதற்காக திமிங்கல எச்சத்தை கொண்டு வந்தனர்.
எண்ணூர் சுனாமி குடியிருப்பில் விற்பனைக்காக வந்த நிலையில் காவல் துறையினர் சந்தேகம் அடைந்து விசாரணை மேற்கொண்டதில் அவரிடம் திமிங்கல எச்சம் இருந்ததை அடுத்து அவற்றை பறிமுதல் செய்து வனத்துறையினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்தனர்.