ரோட்டோர தடுப்பு சுவற்றில் ஒய்வு எடுக்கும் சிறுத்தை !
திம்பம் மலைப்பாதையில் ரோட்டோர தடுப்பு சுவற்றில் ஒய்வு எடுக்கும் சிறுத்தை வீடியோ வைரலாகி வருகிறது.
திம்பம் மலைப்பாதையில் ரோட்டோர தடுப்பு சுவற்றில் ஒய்வு எடுக்கும் சிறுத்தை சத்தி, ஏப்.08 - சத்தி புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. தமிழக - கர்நாடக மாநிலங்கள் இணைக்கும் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் இரவில் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.
இதனால் ரோடுகள் இரவில் அமைதியாக உள்ளது. இதன் காரணமாக வனப்பகுதியை விட்டு வெளியே வந்து ரோட்டில் வனவிலங்குகள் உலா வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை திம்பம் மலைப்பாதை ஓரமாக உள்ள தடுப்புச் சுவற்றில் சிறுத்தை ஒன்று ஒய்வு எடுத்து கொண்டிருந்தது.
இதை அந்த வழியாக சென்ற வாகன ஒட்டி ஒருவர் செல்போனில் வாகனத்தில் இருந்த லைட் வெளிச்சத்தில் எடுத்துள்ளார். இதை கண்ட சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தாவி சென்று மறைந்தது. இந்த வீடியோ காட்சியை சோஷியல் மீடியாவில் பதிவு விட்டுள்ளார்.இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
திம்பம் மலைப்பாதை வழியாக இரவு நேரங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் எனவே திம்பம் மலைப்பாதை வழியாக அதிகாலை நேரத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் வாகனங்களை கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்திவருகின்றனர்.