எடப்பாடியில் அதிகபட்சமாக 23 மி.மீ. மழை பதிவு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிகபட்சமாக 23 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.;
கோப்பு படம்
கிழக்கு திசை காற்றின் மாறுபாடு காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்க ளாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. ஏற்காட்டில் நேற்றிரவு தொடங்கிய மழை இன்று அதிகாலை வரை சாரல் மழையாக பெய்தது .
மேலும் நேற்றிரவு பனி மூட்டமும் நிலவியது. இதனால் கடும் குளிர் நிலவி வருவதால் பொது மக்கள் வெளியில் செல்ல முடியாமல் தவியாய் தவித்து வருகிறார்கள். மாவட்டத்தில் அதிக பட்சமாக எடப்பாடியில் 23 மி.மீ. மழை பெய்துள்ளது. பெத்தநாயக்கன் பாளையத்தில் 18, தம்மம்பட்டி 16, தலைவாசல் 14, சங்ககிரி 13.2, ஆத்தூர் 12, சேலம் 6.1, ஏற்காடு 6, வீரகனூர் 5, கரியகோவில் 5, கெங்கவல்லி4, ஆனைமடுவு 3, ஓமலூர் 2, காடையாம்பட்டி 0.6 மி.மீ என மாவட்டம் முழுவதும் 127.90 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் மாவட்டம் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காட்சி அளித்தது.