தாய் பசுவை காப்பாற்ற பாசப் போராட்டம்; 20 நாட்களே ஆன கன்று

தூத்துக்குடியில் சகதியில் நான்கு கால்களும் புதைந்த தாய் பசுவை காப்பாற்ற, 20 நாட்களே ஆன கன்று தீவிரமாக முயற்சி செய்தது பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

Update: 2023-12-27 16:29 GMT

தூத்துக்குடியில் கடந்த 17ஆம் தேதி கனமழை கொட்டி தீர்த்தது இதில் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஆங்காங்கே மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர. இந்த நிலையில் கடந்த 19ஆம் தேதி தீயணைப்புத் துறையினர் வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது வஉசி துறைமுகத்தில் நீலகண்டன் பாலம் அருகே கன்று குட்டி நடுரோட்டில் கத்திக் கொண்டே நின்றுள்ளது.

அப்போது பொதுமக்களை அழைப்புக்காக Jeepல் சென்ற தீயணைப்புத் துறையினர் கன்றைப் பார்த்ததும் உடனே கீழே இறங்கி பார்த்தபோது பிறந்து 20 நாட்களே ஆன கன்று குட்டியானது காட்டுப்பகுதியை நோக்கி ஓடத் துவங்கியது‌‌. கிட்டத்தட்ட அரை 500 மீட்டர் ஓடிச் சென்றது அந்தக் கன்று குட்டி. தீயணைப்புத் துறையினரும் அந்த கன்றை பின் தொடர்ந்த வரை சென்றுள்ளனர்.

அப்போது ஓடிய கன்று ஒரு முட்புதர் அருகே தண்ணீரில் அடித்து வரப்பட்டு நான்கு கால்களும் சகதியில் சிக்கிக் கொண்ட நிலையில் இருந்த தாய் ( பசுவை) ஆபத்தில் இருப்பதை தெரியப்படுத்து வதற்காகவே இந்த கன்று சாலையில் இருந்து சத்தமிட்டு கொண்டிருந்ததை உணர்ந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக தாய் பூசுவை மணலில் இருந்து மீட்பதற்காக கயிறு கட்டி சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். பிறந்து 20 நாட்களே ஆன இந்த சிறிய கன்று குட்டியின் பாசப் போராட்டம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

Tags:    

Similar News