விளைப்பொருள் விற்பனை செய்ய முன் அனுமதி சீட்டு பெற வேண்டும்

மணிலா, எள்ளு விளைப்பொருள் விற்பனை செய்ய அவசியம் முன் அனுமதி சீட்டு பெற வேண்டும் என ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலகம் அறிவித்துள்ளது.

Update: 2024-03-30 04:25 GMT

மணிலா, எள்ளு விளைப்பொருள் விற்பனை செய்ய அவசியம் முன் அனுமதி சீட்டு பெற வேண்டும் என ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலகம் அறிவித்துள்ளது.


அரியலூர், மார்ச் 30 - அரியலூர் மாவட்டம்,ஜெயங்கொண்டம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட்டத்தில், மணிலா, எள்ளு விளைப் பொருள்களை விற்பனை செய்ய முன் அனுமதி சீட்டு பெற வேண்டும்.இதுகுறித்து ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனைக் கூட அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஜெயங்கொண்டம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், கூட்ட நெரிசலை தவிர்த்திடவும், நேர விரயத்தை கணக்கில் கொண்டும் வரும் திங்கள்கிழமை( 1.4.2024 ) முதல் டோக்கன்( முன் அனுமதி சீட்டு) வசதி நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனவே விவசாயிகள் மணிலா மற்றும் எள்ளு விளைபொருள்களை விற்பனை செய்வதற்கு டோக்கன் பெற்று அதில் குறிப்பிட்டுள்ள நாளில் தங்களது விளைபொருளைகளை கொண்டு வந்து விற்பனை செய்து மாலைக்குள் பாதுகாப்பாக வீடு திரும்ப வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News