கட்டு கட்டாக பணம் வைத்திருந்தவர் கைது
மந்தைவெளி ரயில் நிலையம் அருகே உரிய ஆவணம் இன்றி ரூ.5 லட்சம் வைத்திருந்தவரை. போலீசார் கைது செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 16:07 GMT
கோப்பு படம்
மந்தைவெளி ரயில் நிலையம் அருகே உள்ள வங்கி ஏடிஎம் முன் ஒருவர் கட்டுகட்டாக பணத்துடன் நிற்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. உடனடியாக அங்கு சென்ற அபிராமபுரம் போலீசார் அந்த நபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ராமநாதபுரம், தொட்டியைச் சேர்ந்த ரிஸ்வான் (35) என்பதும் உரிய ஆவணங்களின்றி 5 லட்ச ரூபாய் வைத்திருந்ததும் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து ஹவாலா பணமா என விசாரித்து வருகின்றனர்.