பாக்கம் பகுதியில் காட்டுப் பன்றி கறி விற்பனை செய்தவர் கைது
குடியாத்தம் அருகே பாக்கம் பகுதியில் காட்டுப் பன்றி கறி விற்பனை செய்தவர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-08 13:43 GMT
கைது செய்யப்பட்டவர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பாக்கம் பகுதியில் காட்டுப் பன்றி கறி விற்பனை செய்யப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் குடியாத்தம் வனத்துறையினர் பாக்கம் பகுதியில் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்பொழுது பாக்கம் மலையடிவாரத்தில் அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவர் காட்டுப்பன்றி கறி வைத்திருந்தார்.
இதனையடுத்து அவரிடம் இருந்த 6 கிலோ காட்டுப்பன்றி கறியை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவரை கைது செய்தனர். பின்னர் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த வனத்துறையினர், இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.