மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு தள்ளுவண்டி வழங்கிய சமூக ஆர்வலர் !
வேலூரில் சாலையோரம் தின்பண்டங்கள் விற்கும் மாற்றுத்திறனாளி பெண்ணிற்கு தள்ளுவண்டி வாங்கிக் கொடுத்து சமூக ஆர்வலர் உதவி செய்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-04-01 06:28 GMT
வேலூர் கன்னிகாபுரத்தை சேர்ந்தவர் ராஜலட்சுமி. மாற்றுத்திறனாளியான இவர் கணவர் இறந்த பின்னர் தனது மகளை பள்ளியில் படிக்க வைப்பதற்காக சாலையோரம் தின்பண்டங்கள் விற்கும் தொழில் செய்து வந்தார்.அதில் கிடைக்கும் சிறிய வருமானம் மூலம் குடும்ப செலவு மற்றும் மகளை படிக்க வைத்தார். பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் காணப்பட்ட ராஜலட்சுமியின் நிலையை அறிந்த சமூக ஆர்வலர் தினேஷ் சரவணன் தின்பண்டங்களை வைத்து விற்பனை செய்வதற்கு வசதியாக தள்ளுவண்டி ஒன்று வாங்கி கொடுத்தார். மேலும் அவர், ராஜலட்சுமியின் மகளுக்கு தேவையான நோட்டு புத்தகம், புத்தகப்பை, ஆகியவற்றையும் வழங்கினார்.ராஜலட்சுமிக்கு காது கேட்கும் மிஷின் ஓரிருநாளில் வழங்கப்பட உள்ளதாக தினேஷ் சரவணன் தெரிவித்தார்.