சேலத்தில் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

மீட்கப்பட்ட புள்ளி மானை காட்டில் விட்டனர்;

Update: 2023-12-15 02:09 GMT

சேலத்தில் கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தும்பல் வன சரகத்தில் புங்கமடுவு கீரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவரின் விவசாய கிணற்றில் மூன்று வயது மதிக்கத்தக்க புள்ளி மான் ஒன்று தவறி விழுந்து விட்டது. இது குறித்த தகவலின் பெயரில் வனவர் ராஜேஷ் கண்ணா தலைமையில், நடராஜன், சுப்பிரமணி, ராம்குமார், சேகர், வனக்காவலர்கள் நடேசன், குமார் அடங்கிய குழுவினர் வாழப்பாடி தீயணைப்பு துறையினர் கண்ணன், பெரியசாமி மட்டும் குழுவினர் உதவியுடன் புள்ளிமானை மீட்டனர். மீட்கப்பட்ட புள்ளிமானை கொலப்பாடி காப்பு காட்டில் விடுவித்தனர்.
Tags:    

Similar News