உயிரிழந்த மான் : வனத்துறை அலட்சியம் !
ஒடுகத்தூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் மர்மமான முறையில் புள்ளிமான் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
By : King 24x7 Angel
Update: 2024-03-21 05:39 GMT
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுக்கா, ஒடுகத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் 72 எக்டேர் மலைப்பகுதிகள் காணப்படுகின்றது. இங்கு காட்டு எருமை, மான், காட்டுப்பன்றி, முயல், முள்ளம்பன்றி உள்ளிட்ட உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது மழை இல்லாமல் வெயில் காலம் என்பதால் வன உயிரினங்களுக்கு தண்ணீர் தேவைக்காக வனப்பகுதியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு வருகின்றது. அவ்வாறு வரும் மான்களை நாய்கள் வேட்டையாடுகின்றன. மேலும் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் புள்ளி மான்கள் மீண்டும் வனப்பகுதியை உயிருடன் செல்லாமல் இறந்து விடுகின்றது. இதேபோல் கடந்த மாதம் 3 புள்ளி மான்கள் இறந்த நிலையில் இன்று பள்ளிகொண்டா அடுத்த இறைவன் காடுபகுதியில் விவசாய நிலத்தில் ஆண் புள்ளிமான் ஒன்று மர்மமாக இறந்து கிடந்துள்ளது. இதனைப் பார்த்த நிலத்தின் உரிமையாளர் கிருஷ்ணன்(60) என்பவர் உடனடியாக ஒடுகத்தூர் வனச்சரக அலுவலருக்கு தகவல் கொடுத்துள்ளார். இருப்பினும் வனத்துறை கண்டு கொள்ளாததால் மான் விவசாய நிலத்திலேயே உள்ளது. வனத்துறையின் அலட்சியத்தால் வன உயிரினங்கள் உயிரிழந்த வருவதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.