மின்சார ரான்ஸ் பார்மரில் திடீர் தீ 3 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது

சேத விபரங்கள் கூறித்து விபரங்கள் முழுயாக தெரிவிக்கவில்லை

Update: 2023-12-10 12:25 GMT

மின்சார டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ 3 மணி நேரம் போராடி அணைக்கப்பட்டது

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ஆத்தூர் அருகே விநாயகபுரம் செந்தில்நகர் ரெயில்வே கேட் அருகே சாலையோரம் ஒரு மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) உள்ளது. அந்த டிரான்ஸ்பார்மரில் இருந்து திடீரென புகை கிளம்பியது. அதன்பிறகு தீப்பற்றி மளமளவென பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. மேலும் அந்த பகுதியில் கரும்புகை மூட்டமும் காணப்பட்டது. இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் தீயணைப்பு படையினருக்கும், மின்சார துறைக்கும் உடனடியாக தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அந்த பகுதிக்கு செல்லும் மின்சார இணைப்பை மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக துண்டித்தனர். அதேநேரத்தில் சம்பவ இடத்திற்கு நிலைய அலுவலர் அசோகன் தலைமையில் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் தீயணைப்பு கருவி மூலம் ரசாயன பொடியை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முற்றிலும் அணைக்கப்பட்டது.

அதே நேரத்தில் மின்மாற்றியின் பெரும்பகுதி எரிந்து சேதம் அடைந்து விட்டது. இருப்பினும் சேத விவரங்கள் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் குறித்து ஆத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருந்திருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்த தீ விபத்து காரணமாக ஆத்தூர், நரசிங்கபுரம் பகுதிகளிலும் நேற்று இரவு வரை 7.30 மணி வரை மின்சார வினியோகம் தடைப்பட்டது. அதன்பிறகு மின்சார வினியோகம் சீரானது.

Tags:    

Similar News