முதுமலையில் ஊர்வன, இருவாழ்விகள் கணக்கெடுப்பு
நீலகிரி மாவட்டம் முதுமலை, ஊட்டி வனக்கோட்டத்தில் 51 வகை ஊர்வன, 31 வகை இருவாழ்வி இனங்கள் வாழ்வதாக கண்டறியப்பட்டுள்ளது.
Update: 2024-02-26 01:16 GMT
முதுமலை புலிகள் காப்பகத்தில் முதன்முறையாக ஊர்வன மற்றும் இருவாழ்விகள் கணக்கெடுப்பு முன் கள வனப்பணியாளர்கள், வல்லுநர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் கடந்த 23 முதல் 25ம் தேதி வரை ஊட்டி வனக் கோட்டத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, கார்குடி முதுமலை மற்றும் நெலாக்கோட்டை ஆகிய வன சரகங்களில் மொத்தம் 765 மாதிரி இடங்களில் (2 மீட்டர் அகலம் 20 மீட்டர் நீளம்) மேற்கொள்ளப்பட்டது. இந்த கணக்கெடுப்பில் மொத்தம் 51 வகை ஊர்வன இனங்கள் ( Reptiles) மற்றும் 31 வகை இருவாழ்விகள் இனங்கள் ( amphibians) கண்டறியபட்டுள்ளன. அடுத்த கணக்கேடுப்பு ஜூன் மாதத்தில் பருவ மழைக்கு பிறகு நடத்த திட்டமிடபட்டுள்ளது. அதன் பின்னர் முதுமலை புலிகள் காப்பகத்தில் ஊட்டி வனக் கோட்டத்தில் ஊர்வன மற்றும் இருவாழ்வி இனங்களின் தோராயமான எண்ணிக்கை தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.