நெத்திமேட்டில் மனைவி, மாமனார், மாமியார், மைத்துனரை வெட்டிய வாலிபர்

சேலம் நெத்திமேட்டில் மனைவி, மாமனார், மாமியார், மைத்துனரை கொடுவாளால் வெட்டிய வாலிபர் கைது;

Update: 2023-12-08 15:38 GMT

கோப்பு படம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சேலத்தை அடுத்த வேம்படிதாளம் பகுதியைச் சேர்ந்தவர் தமிழ் (27) இவருக்கும் சேலம் நெத்திமேடு எம்ஜிஆர் நகரை சேர்ந்த புவனேஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. தற்போது குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு புவனேஸ்வரி அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டார். தொடர்ந்து இன்று காலை தமிழ் மனைவியை அழைப்பதற்காக அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றார். அங்கிருந்த மனைவியை தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.

Advertisement

அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ் மனைவி புவனேஸ்வரி, மாமனார் சிவக்குமார், மாமியார் சித்ரா, மைத்துனர் மூர்த்தி ஆகிய நான்கு பேரையும் கொடுவாளால் வெட்டினார். காயம் அடைந்த அவர்கள் அலறி அடித்தபடியே வெளியே ஓடினர். அப்போதும் அவர்களை ஓட ஓட விரட்டி வெட்டியதாக கூறப்படுகிறது.

அவர்களின் அலறல் சத்தம் கேட்ட அந்த பகுதியினர் அங்கு திரண்டனர் இதை பார்த்த தமிழ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற அன்னதானப்பட்டி போலீசார் காயமடைந்த 4 பேரையும் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தமிழை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News