ஆசனூர் அருகே கரும்பு லாரியை வழிமறித்த காட்டு யானை
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;
Update: 2024-04-29 13:47 GMT
ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்ற காட்டு யானையால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கரும்பு லாரியை வழிமறித்து கரும்புகளை சுவைத்து நின்ற யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். கரும்பு பாரம் ஏற்றி வரும் வாகனங்கள் தார் பாய் மூலம் முழுவதுமாக மூடி கொண்டு வரவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.