சத்தியமங்கலம் அருகே கஞ்சா விற்பனை
சத்தியமங்கலம் அருகே கஞ்சா விற்பனை செய்த பெண் கைது செய்யப்பட்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-19 15:55 GMT
பெண் கைது
சத்தியமங்கலம் அருகே உள்ள கெம்பாநாய்க்கன் பாளையத்தில் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யபடுவதாக சத்தி போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் சத்தியமங்கலம் காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் தலைமையில் , உதவி ஆய்வாளர் மேனகா மற்றும் தலைமைக்காவலர்கள் சக்திவேல், காமராஜ் ஆகியோர் கிடைத்த தகவலின் பேரில் கொண்டப் பாநாய்க்கன் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கொண்டப்பநாய்க்கன் பாளையம் அங்கன்வாடி அருகில் குடியிருக்கும் வீட்டின் முன்பாக வைத்து கஞ்சா விற்பனை செய்ததாக செல்வி (29) கைது செய்தனர். அவரிடமிருந்து ரூபாய் 5000 மதிப்பளான சுமார் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். சத்தி போலீஸார் கைது செய்யப்பட்ட செல்வியை நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றனர்.