அதிமுகவில் இணைந்த அமமுக நிர்வாகிகள்

அமமுக நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

Update: 2023-11-19 11:43 GMT

அமமுக நிர்வாகிகள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி உதயகுமார் ஏற்பாட்டில் அமமுகவை சேர்ந்த மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும், தலமை நிலைய செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான இ.மகேந்திரன் தலைமையில் அக்கட்சியின் மாவட்ட அவைத்தலைவர் குரு.பாலமுருகன், செல்லம்பட்டி ஒன்றிய செயலாளரும்,

சித்துபட்டி ஊராட்சி மன்ற தலைவருமான இபிவி ஜெயராமன், உசிலம்பட்டி நகர செயலாளர் பி.குணசேகர பாண்டியன், உசிலம்பட்டி ஒன்றிய செயலாளரும், ஒன்றிய துணை சேர்மனுமான மலேசியா ஆர். பாண்டியன், சேடப்பட்டி ஒன்றிய செயலாளர் சி.நரசிங்க பெருமாள், வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஆர்.விருமப்பராஜன், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் எம்.அஜிம் பாஷா, தகவல் தொழில்நுட்பப்பிரிவு மாவட்ட செயலாளரும், உசிலம்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான வி.பிரகதீஸ்வரன்,

நகர அம்மா பேரவை தொழிற்சங்க இணை செயலாளர் எஸ்.பால்பாண்டி ஆகியோர் இன்றைய தினம் அக்கட்சியில் இருந்து விலகி கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியின்போது புதியதாக கழகத்தில் இணைந்த நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

உடன் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான தமிழரசன், மதுரை மேற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தமிழழகன், மேற்கு மாவட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் அழகு மாயன், மேற்கு மாவட்ட மீனவரணி இணை செயலாளர் வாகை விக்னேஷ், திருமங்கலம் நகர அம்மா பேரவை செயலாளர் விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News