அபுதாபி தமிழ் மக்களுக்கு அரிய வாய்ப்பு
அபுதாபி தமிழ் மக்கள் மருத்துவ முகாமில் கலந்து கொள்ள சிறப்பு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அய்மான் சங்கத்தின் சார்பாக அபுதாபியில் வசிக்கக் கூடிய இந்திய மக்களுக்கு ஒவ்வொரு வருடமும் மருத்துவத்திற்கான சிறப்பு சலுகை அட்டை LLH மருத்துவமனை நிர்வாகத்தின் சார்பாக மருத்துவ முகாம் நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பு சலுகை அட்டைகள் வழங்கப்படும்.
அதே போன்று இந்த 2024 வருடமும் சிறப்பு சலுகை Digital அட்டைகள் இந்த மாதம் இறுதிக்குள் வழங்கப்பட உள்ளனர். Digital சிறப்பு சலுகை அட்டையின் பயன்கள் பின்வருமாறு:- இந்த சலுகை அட்டைகள் ஏற்கனவே இன்சூரன்ஸ் கார்டு உள்ளவர்கள் மட்டும் பயன்படுத்த முடியும் டாக்டரை பார்க்க செல்லும் பொழுது கூடுதலாக co-payment AED 20, 50 என்று செலுத்த தேவையில்லை.
மேலும் எக்ஸ்ரே, ஸ்கேன், என்று எடுக்கும் பொழுது கூடுதலாக co-payment AED 10, 20 என்று செலுத்த தேவையில்லை. ஏற்கனவே குடும்ப தலைவர் பதிவு செய்தால் குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களும் சலுகை முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆனால் இப்பொழுது குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களும் பதிவு செய்ய வேண்டும் குழந்தைகளை தவிர, குழந்தைகளுக்கு தனது பெற்றோர்களின் சலுகை அட்டைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த சிறப்பு சலுகை அபுதாபி மற்றும் பனியாஸ், முஸஃப்பாலில் உள்ள LLH மருத்துவமனை, LIFE CARE மருத்துவமனை மற்றும் LLH கிளினிக்களுக்கும் பொருந்தும். குறிப்பு : இந்த வருடத்திற்கான கார்டு புதிதாக பதிவு செய்தவர்களுக்கு மட்டும் கார்டு வழங்கப்படும்.
எனவே ஏற்கனவே பதிவு செய்து கார்டு பெற்றவர்களும் மீண்டும் பதிவு செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். இந்த 2024 வருடத்திற்கான விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் 20-01-2024 கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது. இந்த இலவச மருத்துவ முகாம் மற்றும் பிரிவில்லேஜ் கார்டு வழங்கும் நாள் 28-01-2024 அபுதாபி எலக்ட்ரா ரோட்டில் உள்ள LLH ஹாஸ்பிடல் வளாகத்தில் நடைபெற உள்ளது.