எஸ்.ஆர்.எம் ஹோட்டல் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் - டிடிவி தினகரன்

நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை பாரிவேந்தரின் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் நடத்தப்படும் நட்சத்திர விடுதி மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக அரசையும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தையும் வலியுறுத்துகிறேன் என டி டி வி தினகரன் தெரிவித்துள்ளார்.;

Update: 2024-06-15 03:59 GMT

 டி.டி.வி. தினகரன் 

அமமுக பொதுச் செயலாளர் டி டி வி தினகரன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், திருச்சி எஸ்.ஆர்.எம் நட்சத்திர விடுதியை உள்நோக்கத்துடன் மூட முயற்சிக்கும் திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. திருச்சி ரேஸ்கோர்ஸ் சாலையில் 30 ஆண்டுகளாக இயங்கிவரும் இந்திய ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் பாரிவேந்தர் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் நடத்தப்படும் நட்சத்திர விடுதிக்குள், காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து காலி செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisement

எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ள இடத்திற்கான குத்தகை காலத்தை நீட்டிக்கக் கோரி அந்நிறுவனம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், எந்தவித முன்னறிவிப்புமின்றி திடீரென ஹோட்டலை சட்டவிரோதமாக திமுக அரசு மூட முயற்சிப்பது கடும் கண்டனத்திற்குரியது. ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றாண்டுகளில் மாநிலத்தின் உரிமை மற்றும் மக்கள் நலனைப் பற்றி சிறிதும் சிந்திக்காத திமுக அரசு, தன் ஆட்சி அதிகாரத்தை இதுபோன்ற பழிவாங்கல் நடவடிக்கைகளுக்காக மட்டுமே வாடிக்கையாக பயன்படுத்தி வருவதை ஒருபோதும் ஏற்க முடியாது.

எனவே, நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் உத்தரவு வரும் வரை பாரிவேந்தர் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் நடத்தப்படும் நட்சத்திர விடுதி மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும் என தமிழக அரசையும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தையும் வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News