நான் ஏன் சினிமாவில் நடிக்கிறேன் தெரியுமா.? - லெஃப்ட் ரைட் வாங்கிய கமல்ஹாசன்
”நான் கோபத்தில் அரசியலுக்கு வரவில்லை. சோகத்தில் அரசியலுக்கு வந்துள்ளேன். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்றேன்”
கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் 7 வது ஆண்டில் அடையெடுத்து வைக்கும் விழாவில் அதன் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய கமல்ஹாசன், ”நான் கோபத்தில் அரசியலுக்கு வந்தவன் இல்லை. சோகத்தில் வந்தவன். என் மக்களுக்கு இப்படி நடக்கலாமா, ஏன் இப்படி நடக்கிரது என்ற கேள்வியுடன் அரசியலுக்கு வந்தவன் நான். அரசியலுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை யோசிக்காமல் வந்தவன்.
என்னை சினிமாவில் நடிக்கிறேன். முழுநேர அரசியல்வாதி இல்லை என்கின்றனர். முழு நேர அரசியல்வாதி என்பவர் யார். அப்படி ஒருவனும் கிடையாது. முழுநேர அப்பனும் கிடையாது, முழுநேர கணவனும் கிடையாது, முழுநேர பிள்ளையும் கிடையாது. அப்போது முழுநேர அரசியல்வாதி யார் என்பதை சொல்லுங்க. அப்பறம் நான் ஏன் சினிமாவில் நடிக்கிறேன் என்று சொல்கிறேன்.
என்னை இத்தனை வருடமாக வீடு, கார் வசதி எல்லாம் கொடுத்து வைத்திருக்கிறீர்கள். பிறகு நான் எதற்காக அரசியலுக்கு வரவேண்டும். நான் அரசியலுக்கு வந்ததற்கு ஒரே காரணம், உங்கள் அன்புக்கு இன்னும் கைமாறு செய்யவில்லை என்பது தான். நான் வரிக்கட்டிட்டேன், சினிமாவில் நடித்துவிட்டேன் என்று போக முடியாது. ஏனென்றால் நீங்கள் கொடுத்த அன்புக்கு இன்னும் பாக்கி உள்ளது. அதற்கு வட்டிக்கூட இன்னும் நான் கொடுக்கவில்லை.
நான் ஏன் சினிமாவில் நடிக்கிறேன் என்று கேட்டால் சொல்கிறேன். இந்த வீடு, இந்த இடம், எனது அரசியல் எனது கட்சி எல்லாமே எனது நடிப்பில் மூலம் கிடைத்த பணத்தில் தான் நான் செய்து வருகிறேன். இதை திமிருடன் கூறுகிறேன். பெரியாரிடம் இருந்து தான் என் திமிரு வந்துள்ளது. பிறருடைய காசில் நான் செலவு செய்தால் என்னை கணக்கு கேட்கலாம். நான் என் பணத்தில் எல்லாமே செய்கிறேன்.
நான் கோவையில் 1500 ஓட்டு வித்யாசத்தில் தோற்கவில்லை. 90,000 பேர் ஓட்டுப்போடவில்லை. அதனால் தான் நான் தோல்வியடைந்தேன். என்னை அரசியலுக்கு வர வைப்பது ரொம்ப கஷ்டம் என்றனர். என்னை போக வைக்கிறது அதைவிட கஷ்டம். எனக்கான அன்பை நீங்கள் அட்வான்ஸாக கொடுத்துள்ளீர்கள். அப்படிப்பட்ட ஆளான என்னை நீங்கள் தூக்கி வைக்க வேண்டும். நீங்க முன்னாடி எழுந்து வரவேண்டும். என்னால் செலவு செய்வதற்கு பணம் இல்லை. நீங்கள் கொடுத்த பணம் தான் என்னிடம் உள்ளது. கோடிக்கணக்கில் செலவு செய்ய நான் உங்களிடம் இருந்து திருடவில்லை.
நான் செய்வது வேறு அரசியல். வியாபார நோக்கத்தில் நான் அரசியல் இல்லை. என் அரசியல் நாளை சமூதாயத்திற்கு உதவும். இந்த அரசியல் பல அவமானங்கள் படவேண்டும். தேசத்தின் குடியுரிமையே இங்கு ஆட்டம் கண்டுள்ளது. முதலில் தேசம், பின்னர் தமிழ்நாடு, அதன்பின்னர் தான் மொழி. விவசாயிகளுக்கு தமிழகம் செய்துள்ள 10 சதவீதம் கூட ஒன்றிய அரசு செய்யவில்லை. டெல்லியில் விவசாயிகளை தடுக்க ஆணிப்படுக்கையை போட்டு வைத்துள்ளனர். எதிரிகளை போல் விவசாயிகளை ஒன்றிய அரசு கையாண்டு வருகிறது.
ஏழ்மை என்பது நிரந்தரம் இல்லை. நீங்கள் நினைத்தால் அதை மாற்றலாம். ஓட்டுக்கு ரூ.5000 வாங்கிவிட்டு, அவர்களுக்கு ரூ.50 லட்சம் கொடுக்கிறீர்கள். இதை புரிந்து கொள்ள வேண்டும். இந்த கட்சியை ஆரம்பித்ததில் எனக்கு லாபம் இல்லை. எனக்கு எவ்வளாவோ நஷ்டம் தான். இருந்தாலும் எதிர்காலத்தில் வருவோருக்காக இதை செய்து கொண்டிருக்கிறேன்” என்றார்.ந்