மறைந்த விஜயகாந்த் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் சூரி ஆறுதல்
கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் குடும்பத்தினரை சந்தித்து நடிகர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-09 02:58 GMT
மலர் தூவி மரியாதை செய்த நடிகர் சூரி
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவையொட்டி அவரது நினைவிடத்தில் பல்வேறு கட்சித் தலைவர்கள் நடிகர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அஞ்சலி செலுத்தி பின் சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கு சென்று விஜயகாந்த் அவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து விட்டு செல்கின்றனர்.
அந்த வகையில் இன்று நடிகர் சூரி கோயம்பேட்டில் உள்ள விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு, பின் சாலிகிராமத்தில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று விஜயகாந்த் அவர்களின் மனைவியும் தேமுதிக கட்சியின் பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் அவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து சென்றார்