நடிகர் சூர்யா மகன் கராத்தேயில் பிளாக் பெல்ட்: வீடியோ எடுத்து மகிழ்வு

நடிகர் சூர்யா மகன் தேவ் கராத்தேயில் பிளாக் பெல்ட் பெற்றார், அதை மொபைலில் வீடியோ எடுத்து ரசித்த தந்தை சூர்யா மற்றும் தாத்தா சிவக்குமார்.

Update: 2024-04-21 10:18 GMT

சென்னை அசோக் நகர் 7 ஆவது அவன்யுவில் உள்ள ஜென் இசின்றியு கராத்தே அசோசியேசன் சார்பில் தங்களிடம் கராத்தே பயின்ற மாணவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மொத்தம் 61 மாணவர்களுக்கு இன்று பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது, அதில் நடிகர் சூர்யா மகன் தேவ் - ம் ஒருவராக பிளாக் பெல்ட் பெற்றார்.  இந்த காரத்தே பள்ளியில் 84 வயதான சிட்டி பாபு பயின்று வருகிறார் தனது 76 ஆவது வயதில் கராத்தே கற்க தொடங்கியவர் இப்போது பிரவுன் பெல்ட் வைத்துள்ளார், அவர் 100 ஓடுகள் உடைத்து உலக சாதனை ஆகஸ்ட் மாதம் செய்ய உள்ளார் அதற்கு இன்று மாதிரி முயற்சி நடைபெற்றது. மாஸ்டர் ஹரிஷ் கெரிவாலா இவர்களுக்கு பிளாக் பெல்ட் வழங்கினார்.  4 ஆண்டுகள் பிறகு, ஒரு ஆண்டு பயிற்சிக்கு பின் இன்று 61 பேருக்கு பிளாக் பெல்ட் வழங்கப்பட்டது. இன்று நடந்த நிகழ்ச்சியில் 6 ஆம் ராங்க் பிளாக் பெல்ட் குறைவான 26 வயதில் பிரதீப் பாப்பு பெற்றுள்ளார். சூர்யாவின் மகன் தேவ் சூர்யா 14 வயதில் முதல் பிளாக் பெல்ட் பெற்றுள்ளார், கார்த்தேயில் 10 ஆண்டுகள் பயிற்சி எடுத்துள்ளார். இன்று தேவ் பிளாக் பெல்ட் பெறுவதை காண தேவின் தந்தையும் நடிகருமான சூர்யா, அவரின் தாத்தா நடிகர் சிவக்குமார் மற்றும் பாட்டி லட்சுமி சிவக்குமார் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

பிளாக் பெல்ட் வழங்குவதற்கு முன் நடைபெற்ற போட்டியில் தேவ் சண்டையிட்டதை சூர்யா மற்றும் சிவக்குமார் இருவரும் தங்களது மொபைல் போன்களில் வீடியோ எடுத்து ரசித்தனர். தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் நடிகர் சூர்யா ப்ளாக் பெல்ட் பெற்ற அனைவருடனும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Tags:    

Similar News