உடல் நல குறைவிலும் வாக்களிக்க வந்த நடிகர் விஜய்

உடல் நிலை சரியில்லாத நிலையிலும் வாக்கு சாவடிக்கு வந்த நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் தனது வாக்கை பதிவு செய்தார்.

Update: 2024-04-19 07:46 GMT

தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதி நீலாங்கரை பகுதியில் உள்ள புனித தோமையார் மலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வாக்கு செலுத்த உடல் நலக் குறைவுடன் மிகவும் சோர்ந்த நிலையில் வந்தார். காலையிலிருந்து நடிகர் விஜய் வாக்கு செலுத்த வருவார் என்று, ரசிகர்கள் மற்றும் ஊடகத்தினர் என பலரும் காத்துக் கொண்டு இருந்தனர்.

அவரை காண ஒட்டுமொத்தமாக 500க்கும் மேற்பட்டோர் வாக்குப்பதிவு மையத்திற்குள் நுழைந்ததால் கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். தனது வாக்கினை செலுத்தினார் நடிகர் விஜய். வாக்குப்பதிவு மைய பள்ளி கட்டிடத்தின் மீது ஏறி குதித்து நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தளபதி என்று உற்சாக குரல் எழுப்பினர். எந்த வாகனத்தையும் வாக்குப்பதிவு மையத்திற்குள் அனுமதிக்காமல் இருந்த நிலையில் கட்டுப்படுத்த முடியாத கூட்டத்தின் காரணமாக நடிகர் விஜய்யின் வாகனம் வாக்குப்பதிவு மையத்திற்குள் கொண்டுவரப்பட்டு அவர் புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News