நடிகர் விஜய் சேதுபதி 50 - இன்று முக்கிய அறிவிப்பு
விஜய் சேதுபதி நடிக்கும் 50 ஆவது படமான மகாராஜா படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.;
Update: 2024-05-29 05:11 GMT
படக்குழு வெளியிட்ட போஸ்டர்
விஜய் சேதுபதியின் 50 ஆவது படமான 'மகாராஜா' படத்தை குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. தற்பொழுது படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் BIG அனௌன்ஸ்மென்ட் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்போவதாக அறிவித்துள்ளனர்.