நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம்; அண்ணாமலை வரவேற்பு
நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி துவங்கியதற்கு பாஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.;
Update: 2024-02-02 14:43 GMT
நடிகர் விஜய் புதிதாக அரசியல் கட்சி துவங்கியதற்கு பாஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விஜய் தொடங்கியுள்ள அரசியல் கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார அவர் வெளியிட்டுள்ள X தள பதிவில் தமிழக மக்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் ஊழல் அரசியலுக்கு எதிராகவும், பாகுபாடற்ற, நேர்மையான, அரசியல் மாற்றம் உருவாகவும், மக்களுக்காகப் பணியாற்ற, ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற பெயரில் புதிய கட்சி தொடங்கியிருக்கும் சகோதரர் விஜய் அவர்களை வாழ்த்தி வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என தெரிவித்துள்ளார்.