நடிகை கௌதமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம்

அதிமுக சார்பில் மக்களவை தேர்தலுக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை நடிகை கௌதமி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

Update: 2024-03-30 16:25 GMT

நடிகை கவுதமி

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு அதிமுகவில் சமீபத்தில் இணைந்த நடிகை கௌதமி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தை ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 4 ஆம் தேதி சென்னை தெற்கு நாடாளுமன்ற தொகுதியிலும், ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னை வடக்கு நாடாளுமன்ற தொகுதியிலும்,

7 ஆம் தேதி கோயம்புத்தூர், 8 ஆம் தேதி திருப்பூர், 9 ஆம் தேதி பொள்ளாச்சி, 10 ஆம் தேதி நீலகிரி, 12 ஆம் தேதி திருச்சிராப்பள்ளி, 13 ஆம் தேதி கரூர், 14 ஆம் தேதி நாமக்கல், 15 ஆம் தேதி சேலத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

Tags:    

Similar News