திருச்செந்துார் கோவிலில் நடிகை நயன்தாரா தரிசனம்
திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா, கணவர் விக்னேஷ் சிவன் தம்பதியர் சுவாமி தரிசனம் செய்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-16 16:12 GMT
நடிகை நயன்தாரா
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடிகை நயன்தாரா மற்றும் அவரது கணவர் விக்னேஷ் சிவன் ஆகியோர் நேற்று சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்தனர். பின், கோவில் பிரகாரம் வழியாக பேட்டரி காரில் கோவிலுக்கு சென்று, சுப்பிரமணிய சுவாமி, சண்முகர் மற்றும் பரிவார தெய்வங்களை நயன்தாரா, விக்னேஷ் சிவன் தம்பதி வழிபட்டனர்.
கோவில் சார்பில் அவர்களுக்கு புஷ்பம் மற்றும் பிரசாதம் உள்ளிட்டவை வழங்கப்பட்டன. போலீசார், பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் என பலர் நடிகை நயன்தாராவுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். நயன்தாராவின் திடீர் வருகையால் திருச்செந்துார் கோவில் பகுதி சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.