மீனவர்கள் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரணம் - உயர்நீதிமன்றம் அறிவுரை

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவியை கூடுதலாக வழங்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

Update: 2024-03-12 04:46 GMT
கச்சத்தீவு பகுதியில் மீன் பிடித்தபோது இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய - மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரிய பீட்டர் ராயன் வழக்கு மார்ச் 25 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் படகுகள் சேதமடைந்தால், எப்படி மீன்பிடி தொழிலை மேற்கொள்ள முடியும், விடுதலை செய்யப்பட்டாலும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதே என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கைது செய்யப்படும் மீனவர்களின் குடும்பத்தினருக்கு நாளொன்றுக்கு ரூ. 250 நிவாரணத்தை வைத்து எப்படி குடும்பத்தை நடத்த முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
Tags:    

Similar News