மாணவிகளுக்கு ஆதார் சிறப்பு முகாம்
சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் அமைச்சர் மா சுப்பிரமணியன் சிறப்பு ஆதார் முகாமை தொடங்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-10 13:25 GMT
ஆதார் முகாம்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று (10.06.2024) சென்னை, சைதாப்பேட்டை, மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு, விலையில்லா பாடப்புத்தகங்கள், அஞ்சலக வங்கி கணக்கு எண் ஆகிய சேவைகள் மாணவிகள் பயன்பெறும் வகையில் துவக்கி வைத்து விழா பேரூரையாற்றினார்.
இந்நிகழ்வில் பெருநகர சென்னை மாநகராட்சி துணை ஆணையர் (கல்வி) ஷரண்யா அறி, மண்டலக்குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாமன்ற உறுப்பினர்கள் ஸ்ரீதர். மோகன்குமார், சுப்பிரமணி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உடனிருந்தனர்.