ஆதி திராவிடர் வீட்டுமனை ஒதுக்கீடு - சிபிஐ விசாரணை உத்தரவு ரத்து.
ஆதி திராவிடர்களுக்கான வீட்டுமனை ஒதுக்கீட்டிற்கான நிலம் கையகப்படுத்த புதிய அறிவிப்பாணை பிறப்பிக்காதது குறித்து சிபிஐ விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுவதை வழக்கமான நடைமுறையாக கொள்ள முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஆதி திராவிடர்களுக்கான வீட்டுமனை ஒதுக்கீட்டிற்கான நிலம் கையகப்படுத்த புதிய அறிவிப்பாணை பிறப்பிக்காதது குறித்து சிபிஐ விசாரணை நடத்த பிறப்பித்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் ராஜ்சேகர் அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், காலூர் கிராமத்தில் நிலமற்ற ஆதி திராவிடர்களுக்கு வீட்டு மனை வழங்க, 3.92 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு 1983ம் ஆண்டு கையகப்படுத்தியது. நிலத்தை வழங்குவதற்கான புதிய அறிவிப்பாணையை வெளியிடாமல் அதிகாரிகள், நில உரிமையாளர்களுடன் கூட்டு சேர்ந்து செயல்படுவதாக கூறி சிபிஐ விசாரணைக்கு தனி நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.