புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் - கோவை எம்.பி
கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நாடாளுமன்றத்துக்குள் நடைபெறும் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து புயலால் பாதிப்புக்குள்ளானது குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் குழு செயலாளரிடம் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொடுத்துள்ளார்.
கோவை:மிக்ஜாம் புயலால் தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து புயல் பாதிப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் ஒத்திவைப்பு தீர்மானத்திற்கு நோட்டீஸ் வழங்கியுள்ளார்.
வங்க கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் 48 ஆண்டுகள் இல்லாத அளவில் அதீத காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.இந்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயப்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன் நாடாளுமன்றத்துக்குள் நடைபெறும் அனைத்து அலுவல்களையும் ஒத்திவைத்து புயலால் பாதிப்புக்குள்ளானது குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் குழு செயலாளரிடம் ஒத்திவைப்பு தீர்மானத்தை கொடுத்துள்ளார்.