வேட்பாளர் மருத்துவ பரிசோதனை அறிக்கை வழக்கு ஒத்தி வைப்பு.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவுடன், மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.
30 நாட்களுக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன், பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேட்பாளர்களுக்கு அறிவுறுத்த தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி எஸ்.வி.சுப்பையா என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வேட்புமனுவுடன், மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிப்பதை கட்டாயமாக்கக் கோரிய வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்தது.
வேட்பாளர்களின் உடல் நிலை குறித்து பரிசோதனை அறிக்கை என்பது சம்பந்தப்பட்டவர்களின் தனிப்பட்ட அந்தரங்க விஷயம் எனவும், மருத்துவ பரிசோதனை அறிக்கையை சமர்ப்பிக்க அறிவுறுத்த வேண்டுமானால், அதுகுறித்து சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும் எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்ந்தெடுக்கும் பிரதிநிதியின் உடல் நிலையை தெரிந்து கொள்ள வாக்காளர்களுக்கு உரிமை உள்ளது என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.