குற்றபின்னணி எம்.பி - எம்.எல்.ஏ கண்காணிப்பு வழக்கு ஒத்திவைப்பு
எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு ஜூன் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் 561 வழக்குகளும், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் 20 வழக்குகளும் உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. 20 ஊழல் தடுப்பு சட்ட வழக்குகளில் 9 வழக்குகள் சாட்சி விசாரணை முடியும் நிலையில் உள்ளன என்று தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
குற்றச்சாட்டுக்கள் பதிவுக்காக உள்ள வழக்குகளில் விரைந்து குற்றச்சாட்டுக்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. புலன் விசாரணையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. எம்.பி - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை கண்காணிப்பது தொடர்பாக தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கு ஜூன் 20ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.