வதந்திகளுக்கு பிரச்சாரத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்த அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்மணி.....
வதந்திகளுக்கு மீண்டும் பிரச்சாரத்தின் மூலம் முற்றுப்புள்ளி வைத்த நாமக்கல் நாடாளுமன்ற அ.தி.மு.க வேட்பாளர் தமிழ்மணி.
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ராகா தமிழ்மணி வேட்பு மனு தாக்கல் செய்த நாள் முதல் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்றத் தொகுதிகளிலும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார.
அவர் திடீரென உடல் சோர்வு காரணமாக மயங்கினார். இதனையடுத்து அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்ற அவர் ஓய்வுக்கு பின் மீண்டும் நேற்று மாலை பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர் பகுதியில் வாக்கு சேகரிப்பை தொடங்கினார்.
அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி தற்போதைய அரசு அதிமுக ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்களை நிறுத்தியதுடன் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல் பெயரளவில் அறிவித்து வாக்குறுதிகள் நிறைவேற்றவதாக பொய் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
அதனை நம்ப வேண்டாம் எனவும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான ஆட்சி அமைய அட்சரமாக நாமக்கல் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தமிழ்மணிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பேசிய வேட்பாளர் ராகா தமிழ்மணி தற்போது நிலவும் கடும் வெயிலின் தாக்கத்திலும் ஓய்வில்லாமல் காலை 7/ மணி முதல் இரவு 10 மணி வரை ஆறு தொகுதிகளிலும் உள்ள நகர ஒன்றிய கிராமப் பகுதிகள் மற்றும் பட்டி தொட்டி பகுதிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மக்களை நேரில் சந்தித்து ஓய்வில்லாமல் வாக்கு சேகரித்ததின் காரணமாக உடல் அசதியால் சர்க்கரை குறைவு மற்றும் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
கடும் வெயிலுக்கு இடையே தொடர் தீவிர பிரச்சாரத்தின் காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்ததை மற்ற கட்சியினர் அதிமுக வேட்பாளர் திரும்ப பிரச்சாரத்துக்கு வர மாட்டார் எனவும் சமூக வலைதளத்தில் தவறாக பரப்பிய வதந்திகளை முறியடித்து மீண்டும் பிரச்சாரத்தில் களம் இறங்கி உள்ளேன்.
முன்னாள் அமைச்சர் தங்கமணி, சட்டமன்ற உறுப்பினர் சேகர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி மீண்டும் பிரச்சாரத்தை தொடங்கி உன்னை எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனரும், நடிகருமான ஆர் வி உதயகுமார், ரங்கநாதன், நடிகர் அனுமோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு அதிமுக இரட்டை இலை தினத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் பொத்தனூர் நகரக் கழகச் செயலாளர் நாராயணன் தேமுதிக மாவட்ட செயலாளர் ராமலிங்கம் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.