அ.தி.மு.க.. பயிற்சிப் பட்டறை

அ.தி.மு.க.. தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு பயிற்சிப் பட்டறை நாளை நடக்கிறது.

Update: 2023-12-09 10:54 GMT

அ.தி.மு.க.. தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகளுக்கு பயிற்சிப் பட்டறை நாளை நடக்கிறது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் சேலம் புறநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மேட்டூர் சட்டமன்ற தொகுதியில்உள்ள நவப்பட்டி திருமலை மாதவி மஹாலில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணி அளவில் அ.தி.மு.க.வை சேர்ந்த 900 தகவல் தொழில் நுட்ப நிர்வாகிகளுக்கு சமூக வலைதளத்தில் கையாள வேண்டிய பயிற்சி மற்றும் புத்தகங்கள் வழங்கும் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இந்த நிகழ்ச்சிக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் ஆர்.இளங்கோவன் தலைமை தாங்குகிறார் அ.தி.மு.க.தகவல் தொழில் நுட்ப பிரிவு மாநில இணை செயலாளர் நிர்மல்குமார் சிறப்புரை ஆற்றுகிறார். மேட்டூர் நகர செயலாளர் சந்திரசேகரன் எம்.பி. வரவேற்புரை ஆற்றுகிறார் . நிகழ்ச்சி முடிவில் தகவல் தொழில் நுட்பப்பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகாந்தன் நன்றி கூறுகிறார்.  

Tags:    

Similar News