வளர்ப்பு பிராணிகளை வெப்ப அலையில் இருந்து பாதுகாக்க அறிவுரை
வளர்ப்பு பிராணிகளை வெப்ப அலை பாதிப்பால் ஏற்படும் நோயிலிருந்து பாதுகாக்கலாம் என கால்நடை பராமரிப்பு மருத்துவர்கள் அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி கோடை வெயில் தாக்கம் காரணமாக வளர்ப்பு பிராணிகளான நாய் உள்ளிட்டவைகளை வெயிலில் நடை பயிற்சிக்கு அழைத்துச் செல்லக்கூடாது அதிக அளவு தண்ணீர் கொடுக்க வேண்டும் மேலும் குளுக்கோஸ் வழங்க வேண்டும் வெயில் இல்லாத பகுதிகளில் குளிர்ச்சியான இடத்தில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் இதன் மூலம் வளர்ப்பு பிராணிகளை வெப்ப அலை பாதிப்பால் ஏற்படும் நோயிலிருந்து பாதுகாக்கலாம் என கால்நடை பராமரிப்பு மருத்துவர்கள் அறிவுரை
கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று பொதுமக்கள் வீடுகளில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகளான நாய் பூனை உள்ளிட்ட வளர்ப்பு பிராணிகளும் இந்த வெப்பத்தின் காரணமாக பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இதை தவிர்க்க தூத்துக்குடியை சேர்ந்த ஓய்வு பெற்ற கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனரும் கால்நடை மருத்துவரான பின்டன் மிக்ஸியர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார் வளர்ப்பு பிராணிகளான நாய் பூனை உள்ளிட்டவைகளை வளர்த்து வரும் பொதுமக்கள் வெயில் அதிகமாக உள்ள நிலையில் வெப்ப அலையினால் ஏற்படும் நோய் பாதிப்பில் இருந்து வளர்ப்பு பிராணிகளை காத்துக் கொள்ள வெயிலில் நாய் உள்ளிட்டவைகளை நடை பயிற்சிக்கு அழைத்து செல்லக்கூடாது.
வெயில் இல்லாத அதிகாலை நேரம் மற்றும் மாலை நேரங்களிலே அழைத்துச் செல்ல வேண்டும் மனிதர்களைப் போன்று விலங்குகளுக்கும் அதிக அளவு தண்ணீர் வழங்க வேண்டும் அதே போன்று இடையிடையே குளுக்கோஸ் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார் .
மேலும் கார் போன்றவற்றில் வளர்ப்பு பிராணிகளை அழைத்து செல்லும்போது உள்ளே வளர்ப்பு பிராணிகளை பூட்டிவிட்டு சென்றால் வெப்பம் தாங்காமல் மயக்கம் அடையக்கூடிய சூழ்நிலை ஏற்படும் வெயிலில் நடந்து சென்றால் கால்களில் புண்கள் ஏற்பட்டு அதனால் வளர்ப்பு பிராணிகள் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலை உருவாகும் மனிதர்களைப் போன்று வளர்ப்பு பிராணிகளையும் வெயில் இல்லாத பகுதியில் வைத்து வளர்க்க வேண்டும் முடி அதிகமாக உள்ள வளர்ப்பு பிராணிகளான நாய் உள்ளிட்டவற்றின் முடிகளை இந்த வெயில் காலத்தில் வெட்டக்கூடாது.
அவ்வாறு வெட்டினால் வெயிலின் பாதிப்பு அதற்கு அதிகமாக ஏற்பட்டு நோய்கள் உருவாகும் மேலும் வளர்ப்பு பிராணிகளுக்கு வெப்ப அலை மூலம் நோய் உருவானால் உரிய கால்நடை மருத்துவரை அணுகி அதற்குரிய தீர்வை காண வேண்டும் மாறாக வளர்ப்பு பிராணிகளை வளர்ப்போர் தாங்களாக எதையும் அதற்கு கொடுக்கக் கூடாது என்றார்.
வெப்ப தாக்குதல் மூலம் வளர்ப்பு பிராணிகளுக்கு உடலில் அதிக அளவு சூடு உருவாகி மூச்சுத் திணறல், வெட்டு, வாயிலிருந்து அதிகளவு தண்ணீர் வெளியேறுதல் ஆகியவை காணப்படும் இதற்கு தீர்வாக வெயிலில் இருந்து வளர்ப்பு பிராணிகளை பாதுகாத்தாலே நோயிலிருந்து பாதுகாக்கலாம் என்றார்