கெங்கையம்மன் திருக்கோவிலில் பால் கம்பம் நடும் விழா

சிரசு திருவிழாவை முன்னிட்டு கோபாலபுரம் கெங்கையம்மன் திருக்கோவிலில் பால் கம்பம் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-03-21 02:31 GMT

சிரசு திருவிழாவை முன்னிட்டு கோபாலபுரம் கெங்கையம்மன் திருக்கோவிலில் பால் கம்பம் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் பகுதியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு கெங்கையம்மன் திருக்கோவில் சிரசு திருவிழா ஆண்டு தோறும் வைகாசி மாசம் ஒன்றாம் தேதி வெகு விமர்சையாக நடைபெறும். இதில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு கெங்கை அம்மன் கெங்கையம்மனை தரிசனம் செய்வார்கள். அந்த வகையில் இன்று காலை சிரசு திருவிழாவை முன்னிட்டு கோபாலபுரம் கெங்கையம்மன் திருக்கோவிலில் பால் கம்பம் நடும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது . முன்னதாக மூலவர் கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது .இந்த பால் கம்பம் நடும் விழாவில் ஏராளமான பெண்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Tags:    

Similar News