மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என்பதால் கூட்டணி - சரத்குமார்
பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற முறையில் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
Update: 2024-03-12 07:40 GMT
சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில், நாடாளுமன்ற தேர்தல் 2024, தமிழ்நாடு பாஜக கூட்டணியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து, பாஜக மாநில கூட்டணி ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த சமக தலைவர் சரத்குமார் கூட்டணியில் பயணிக்கிறோம் என அறிவிக்கப்பட்டதன் பிறகு மரியாதை நிமித்தமாக பாஜக அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து பேசினோம்.நாளை மறுநாள் தொகுதி பங்கீடு, மற்றும் விருப்பமான இடங்கள் குறித்து பேசிய பிறகு அறிவிக்கிறோம். 1996 ஆம் ஆண்டு நல்லாட்சி அமைய வேண்டும் என 40 நாட்கள் பிரச்சாரம் செய்தவன் நான். இன்றும் அதே நிலையில் தான் இருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்ற முறையில் பாஜகவுடன் இணைந்து இந்த தேர்தலில் போட்டியிடுகிறோம். என்றார்.