மரக்கன்று நடும் பணியில் வேளாண் மாணவிகள்
முசிறி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆதிபராசக்தி வேளாண்மை கல்லூரி மாணவிகள் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டனர்.
Update: 2024-05-04 07:28 GMT
ராணிப்பேட்டை மாவட்டம், கலவை ஆதிபராசக்தி வேளாண்மைக் கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவிகளான வர்ஷா, வசுந்தரா, வெண்பா மாறன், வித்யா, வினோதினி, சவிதா ஆகியோா் கிராமப்புற வேளாண் அனுபவப் பயிற்சியின் ஒரு பகுதியாக காவேரிப்பாக்கத்தை அடுத்த முசிறி ஊராட்சியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை மேற்கொண்டனா். ஊராட்சி மன்ற தலைவர் தயாளன் மற்றும் வள்ளுவம்பாக்கம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் புருஷோத்தமன் தலைமையில் மா, கொய்யா, நாவல், வேம்பு, மற்றும் பழ வகையைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனா். மேலும் கிராம மக்களுக்கு மரக்கன்றுகள் நடுதல் மூலம் கிடைக்கும் நன்மைகளை எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.