அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் ஜெயங்கொண்டத்தில் தீவிரவாக்கு சேகரிப்பு

ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் தீவிர வாக்கு சேகரித்தார்.;

Update: 2024-03-27 13:56 GMT

ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் தீவிர வாக்கு சேகரித்தார்.


ஜெயங்கொண்டத்தில் சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் தீவிர வாக்கு சேகரிப்பு: கழக அமைப்புச் செயலாளர் செம்மலை, மாவட்ட கழக செயலாளர் தாமரை எஸ்‌ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் தனது பிரச்சாரத்தை இன்று துவக்கினார். பெண்கள் ஆரத்தி எடுத்து அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சந்திரகாசன் தனது பிரச்சாரத்தை இன்று தொடங்கினார்.

Advertisement

கழக அமைப்புச் செயலாளர் செம்மலை, முன்னாள் அரசு தலைமை கொரடாவும் அரியலூர் மாவட்டக் கழகச் செயலாளருமான தாமரை எஸ். ராஜேந்திரன் ஆகியோர் அதிமுக வேட்பாளர் சந்திரகாசனை ஆதரித்து திறந்தவேனில் நின்றபடி பொதுமக்களிடத்தில் இரட்டை இலை சின்னத்தில் வாக்கு கேட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது அதிமுக வேட்பாளர் சந்திரகாசனுக்கு சென்ற இடமெல்லாம் பெண்கள் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமஜெயலிங்கம், தேமுதிக மாவட்ட கழக செயலாளர் ராமஜெயவேல் உள்ளிட்ட திரளான கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News