இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருக்கும் கட்சி அதிமுக:வேட்பாளர் பசுபதி

மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தகுதி வாய்ந்த ஒரே ஒரு வேட்பாளர் நான்தான் என வேலூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் பசுபதி தெரிவித்துள்ளார்.

Update: 2024-03-25 14:26 GMT

செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வேட்பாளர் 

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வாணியம்பாடியைச் சேர்ந்த வேட்பாளர் மருத்துவர் பசுபதி வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அதில்,மக்களுக்கு சேவை செய்யக்கூடிய தகுதி வாய்ந்த ஒரே ஒரு வேட்பாளர் நான்தான். குறிப்பாக வேலூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரே வேட்பாளரும் நான் தான். மற்றவர்கள் வெளியூரை சேர்ந்தவர்கள்.

இஸ்லாமியர்களுக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கக் கூடிய கட்சி அதிமுக. வாணியம்பாடியை சேர்ந்தவன் நான். அங்குள்ள இஸ்லாமியர்களுடன் அண்ணன் தம்பியாக பழகி வருகிறேன். நிச்சயம் வெற்றி பெறுவேன்,என்று கூறினார்.

Tags:    

Similar News