வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டியது அதிமுக...!

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டியது அதிமுக ஆட்சியில் தான் என்று முன்னாள் அரசு தலைமைக் கொறடா தெரிவித்துள்ளார்.

Update: 2024-04-09 11:38 GMT

முன்னாள் அரசு தலைமை கொறடா வாக்கு சேகரிப்பு

அரியலூர் மாவட்டம் தாமரைப்பூண்டி, கடலூர் மாவட்டம் பெண்ணாடம் இணைக்கும் வெள்ளாற்றின் குறுக்கே உயர்மட்ட மேம்பாலம் கட்டியது அதிமுக ஆட்சியில் தான் என்று கூறி முன்னாள் அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் வாக்கு சேகரித்தார்.

சிதம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் மா.சந்திரஹாசனை ஆதரித்து, நமங்குணம்,செந்துறை, இரும்புலிகுறிச்சி, ஆனந்தவாடி, பெரியாக்குறிச்சி, மணப்பத்தூர், துளார், குழுமூர், தளவாய், முள்ளுக்குறிச்சி, ஆதனக்குறிச்சி, ஆர்.எஸ்.மாத்தூர், பொன்பரப்பி உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்த அவர் பேசுகையில்,

அதிமுக ஆட்சியில் செந்துறையில் பல எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. குறிப்பாக செந்துறை ஒன்றியத்தில் ஆனைவாரி ஒடை, தாமரைப்பூண்டி, பெண்ணாடம் இடையே வெள்ளாற்றில் உயர்மட்ட மேம்பாலம், அனைத்து ஊராட்சிகளிலும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டம், தார் சாலைகள், தெருவிளக்குகள், வடிக்கால் வசதிகள் உள்ளிட்ட வசதிகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

எனவே இது போன்ற பல திட்டங்கள் செயல்படுத்திட வேட்பாளர் சந்திரஹாசனுக்கு இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார். பிரசாரத்தில் வேட்பாளர் சந்திரஹாசன், முன்னாள் அமைச்சர்கள் செம்மலை, ஜெயபால்,

முன்னாள் துணை சபநாயகர் வரகூர் அருணாச்சலம், பெரம்பலூர் மாவட்டச் செயலர் இளம்பை தமிழ்செல்வன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். படவிளக்கம்: நமங்குணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் சந்திரஹாசன்.

Tags:    

Similar News